கொரோனாவுக்கு பலியான இந்தியாவின் முதல் டாக்டர்

போபால்: இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் குணமடைந்துள்ளதாகவும், 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 1135 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர், 117 பேர் குணமடைந்துள்ளனர்.



இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சத்ருகன் புன்ஞ்வானி என்ற டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் இன்று (ஏப்.,09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், இந்தூர் நகரில் மட்டும் கொரோனா நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதல் டாக்டர் இவர் தான்.