இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார்.

போபால்:


இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் குணமடைந்துள்ளதாகவும், 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 1135 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர், 117 பேர் குணமடைந்துள்ளனர்.